Header Ads

test

மரணதண்டனை தீர்மானத்தை வரவேற்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!!

மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கர்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என தெரிவித்துள்ள அவர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் கூட குற்றவாளிகளிற்கு திட்டமிடப்பட்ட குற்றங்களிற்காக ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என அறிந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் நாட்டின் அரசியல் தலைமைத்துவம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments