தொடர்ந்து அகப்படும் புதையல் அகழும் கும்பல்கள்!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி இலங்கை காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதுவரைக்கும் கிளிநொச்சியில் மட்டும் 3 புதையல் தேடும் கருவிகள் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடந்த ஒரு மாத காலத்தினுள் மீட்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டுமிருந்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியினை சேர்ந்த ஒருவரும் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கில் விடுதலைப்புலிகளால் கைவிடப்பட்ட புதையல்களை அகழ்ந்தெடுக்க பல லட்சம் பெறுமதியான கருவிகளுடன் புதையல் தோண்டுவதற்கு முயற்சிக்கும் நிலையில் கைதுகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெறுமதிமிக்க கருவிகளை யார் வழங்குகிறார்கள் இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுத்துவருகின்றது.
Post a Comment