கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை அண்மித்துள்ள சிவந்தா முறிப்பு பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளையும், குளம் ஒன்றிணையும் ஆக்கிரமிப்பதற்கு சிங்கள மக்கள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சிவந்தா முறிப்பு பகுதி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். இந்த பகுதியில் திட் டமிட்டவகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தமது விவசாய தேவைக்காக தமிழ் மக்களின் காணிகளை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்றய தினம் மேற்படி பகுதியில் கனரக வாகனங்களுடன் வந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமா ன பெருமளவு விவசாய நிலங்களையும், குளம் ஒன்றையும் ஆக்கிரமிக்க முயற்சித்தனர்.
இதனை அறிந்த தமிழ் மக்கள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் இணைந்து குறித்த பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Post a Comment