Header Ads

test

முதலமைச்சர்-ஆளுநர் பேசினால் தீர்வு:சீ.வீ.கே!

வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் பேச்சுக்களை நடத்துவதன் மூலம்  உடனடியாகவே தீர்வினை காணலாமென அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அவர்;, சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. 
அதேபோல் ஆளுநர் நியமனம் செய்யும் அமைச்சர்கள் தொடர்பான ஆலோசனைகளை நடாத்தி அதனை ஆளுநருக்கு வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது. 

இங்கே முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்றட இ யலாது. இருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும். 

அதேசமயம் முன்னாள் அமைச்சர் பா.டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறைமை பிழையானதெனவே நீதிமன்றம் கூறியிருக்கிறது. மற்றையபடி பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. 

ஆகவே இப்போதும் கூட முன்னாள் அமைச்சர் பா.டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்யுங்கள் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கினால்  டெனீஸ்வரன் பதவி நீக்கப்படுவார். 

அதன் பின்னர் அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகளே இருக்காது என கூறினார். இதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், ஆளுநர் றெஜினோல் கூரேயும் புரிந்து கொள்ளவேண்டும். 

தன்னை சட்ட சிக்கலில் மாட்டுவதற்கு சில உறுப்பினர்கள் முயற்சிப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கின்ற நிலையில் அவரை சட்ட சிக்கலில் மாட்டும் எண்ணம் எனக்கில்லை. உறுப்பினர்களுக்கும் அவ்வாறான எண்ணம் இருக்கும் என நான் கருதவில்லையென தெரிவித்துள்ளார். 

இதனிடையே வடமாகாண அமைச்சரவையினை தான் அறிவிப்பு விடுக்கும் வரை கூட்டவேண்டாமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments