Header Ads

test

வடக்கில் இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் விடாப்பிடி!

எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும்.

அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சாதாரணமக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்கநீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதிமகே~; சேனநாயக கூறியுள்ளாரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அப்படி இராணுவம் தரித்துநிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கனவே கூறியுள்ளேன் “இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள்! ஒன்பதில் ஒருபங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்”என்று.

சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே! எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரணமக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவவருவதுசரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவதுஎமது இன மக்களே. படைகளில் சிலருக்குதெற்கில் ஒருகுடும்பம் வடக்கில் ஒருகுடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.



அடுத்து அரசாங்க திணைக்களங்கள் தகவல்கள் இராணுவத்தினருக்கு வழங்குவது பற்றியும் நண்பர் கூறியிருந்தார். இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் இராணுவத்தளபதி. ஆதை நாம் எதிர்பார்ப்பது தான். தருணம் வரும் வரையில்த்தான் இவ்வாறான கருத்துக்கள் தங்கி வாழமுடியும். தருணம் வந்ததும் விட்டு ஏகவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படை வாபஸ் பெறவேண்டியிருந்தது.விபி.சிங்; டெல்கியில் பிரதமர் ஆகியதால்! இங்கிருந்து நாம் எப்பொழுதும் திரும்பமாட்டோம் என்ற கூற்றுடன் தான் அமைதிப்படையினர் வந்தார்கள். ஆகவே தருணங்கள் எப்போது வருவன என்று எம்மால் கூறமுடியாது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments