Header Ads

test

எல்லை கடக்க முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் உக்ரேனில் கைது!

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போலாந்து – உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலாந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments