யாழ் ரயில் விபத்து மூன்றாவது நபரும் மரணம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தவரும் இன்று மாலை சிகிச்சை பயனின்ற உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில் இன்று (28) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்றைய இளைஞர் சீக்கியன் சஞ்சீவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பயனின்றி இன்று மாலை உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
மணியம்தோட்டம் பகுதியில் இருந்து நெளுக்குளம் வீதியை நோக்கி, பல்சர் ரக மோட்டார் சைக்கில் ஒன்றில் தலைக்கவசம் அணியாது, மூவரும் பயணித்தனர். இந்த வேளையில், புகையிரதம் வந்துகொண்டிருந்த போது, சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. சுமார் 10 மீற்றர் தூரத்தில் இருந்து வேகத்தினை கட்டுப்படுத்த முற்பட்ட போதும் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள், இழுத்துச் சென்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோதிய வேகத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். வீசிய போதே இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் சேதமடைந்ததுடன், கையடக்கத் தொலைபேசி மற்றும் வாகன சாவி (திறப்பு) என்பன சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டனர். இந்த தொடருந்துக் கடவையில், சமிஞ்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு கடவை வேலி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியில் இவ்வாறு பல விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், சம்பவத்தினைப் பார்வையிட்ட அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Post a Comment