Header Ads

test

நழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்


யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் சரவணபவனும் மக்களோடு மக்களாக நழுவிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் கட்டளைக்குப் பணிந்து இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். நிகழ்வு முடிந்ததும் இந்தியத் தூதர் குழுப்படம் எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார். அதன்போது சிற்றுண்டி உபசாரத்திற்கும் அவர்கள் அழைக்கப்பட்டனர்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் சரவணபவனும் ஊடகவியலாளர்களைப் பார்ப்பதும் சிறிதுநேரம் இந்தியத் தூதுவரைப் பார்ப்பதுமாக சுழித்துவிட்டு மக்களுக்குள் மக்களாக வெளியேறிச் சென்றிருந்தனர்.

இலங்கை அரசை விமர்சிப்பவர்களாக்க காட்டிக்கொள்ளும் தங்கள் ரணில் மற்றும் இந்தியத் தூதருடன் இணைந்து குழுப்படம் எடுத்து விருந்துண்டு கொண்டாடினால் ஊடகங்கள் விமர்சித்துவிடும் என அஞ்சியே இருவரும் நழுவிச் சென்றதாகத் தெரியவருகின்றது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் குழுப்படம் எடுத்துக்கொண்டதோடு விருந்துபசாரத்திலும் பங்கேற்றிருந்தனர்.

No comments