Header Ads

test

வலி.வடக்கு காணி விடுவிப்பு:இராணுவ வலயத்திற்கான நகர்வு!


வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதிகளில் தொட்டம் தொட்டமாக காணிகளை விடுவிப்பதன் மூலம் இராணுவ – பொதுமக்கள் குடியிருப்பு கொலனிகளை உருவாக்க இராணுவத்தலைமை முற்பட்டுள்ளமை தொடர்ந்தும் அம்பலமாகியே வருகின்றது.

அதிலும் குறிப்பாக அரசியல் தரப்பினை சேர்ந்தவர்களது கோரிக்கைகளினை பயன்படுத்தி இவ்வாறு தொட்டம் தொட்டமாக காணிகளை விடுவிப்பதுடன் மத்தியில் படைத்தளங்களை பேணுவதும் இந்நகர்வுகளின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகின்றது.
அவ்வகையில் நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை ரணில் வடக்கிற்கு புறப்பட்டுள்ள நிலையில் கட்டுவன்-மல்லாகம்- சங்கானை வீதியுடன் குரும்பசிட்டி சந்திக்கு செல்லும் கட்டுவன் ஈழகேசரி பொன்னையா வீதியும் அதனுடன் இணைந்த மைதானக் காணியும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 240மீற்றர் நீளமான வீதியும் 10 குடும்பங்களுக்கு சொந்தமான காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.. 


2016 ஆம் ஆண்டில் குரும்பசிட்டியில் தெற்கு பக்கமாகவுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கும் போது இந்த வீதியும் அதன் அருகில் உள்ள மக்களின் காணியும் விடுவிக்கப்படாது விளையாட்டு மைதானமாக இராணுவத்தினர் கம்பிவேலி போட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன் தனியார் காணியூடாக புதிய வீதி இராணுவத்தினர் அமைத்து குரும்பசிட்டி வீதியுடன் தொடுத்திருந்தனர்.

இதனை புகைப்பட ஆதாரங்களுடன் ஊடகவியலாளர்கள் சிலர் அம்பலப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

தற்போது குரும்பசிட்டி பொன்பரமானந்தா வீத்தியாலய வீதியிலிருந்து குரும்பசிட்டி சந்தியூடாக வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் இராணுவ முகாமுக்குள் உள்ள இவ்வீதியை விடுவிக்குமாறு பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க இவ் வீதியும் அதனுடன் எடுக்கப்பட்ட மக்களின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments