யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவோ அல்லது வீரர்கள் குறைக்கப்படவோ இல்லை என்று யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி கூறினார்.
இன்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
பார்வை குறைபாடுள்ள மக்களின் கண்களின் வெண்படலத்தை அகற்றும் சிகிச்சை இலவசமாக கடவத்தையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment