Header Ads

test

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் வைத்துக் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து வெளியூர் ரக மதுபானப் போத்தல்கள் 9 கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர், 22 வயதுடையவர் என்பதோடு, அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில், 9 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments