என் பெயரை அழிக்கிறார்கள் - மகிந்த கவலை
கட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
ஹோமகம புரான விகாரைக்குச் சென்ற மகிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
காலி அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்துக்குச் சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம், கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மகிந்த ராஜபக்ச, எல்லா கட்டுமானங்களிலும் உள்ள எனது பெயரை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு உள்ள முக்கியமான பிரச்சினை எமது பெயர் தான்.
துடுப்பாட்ட அரங்கத்தில் இருந்து எனது பெயரை நீக்குவதென்றால் விவகாரமில்லை. ஆனால், பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களிலும் அகற்றும் முயற்சியும் நடக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment