Header Ads

test

கோத்தா உள்ளிட்ட ஏழ்வருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்றைய விசாரணையின் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.

அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

அதன்படி நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments