Header Ads

test

வீதி விபத்து: பச்சிளங்குழந்தைகள் மரணம்!


கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்கச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வடமராட்சி கிழக்கின் வத்திராயன் பகுதியை சேர்ந்த சகோதரிகளான இரு சிறுமிகள்; உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் ஏனைய மற்றொரு சகோதரன் படுகாயமடைந்த நிலையில் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்தையடுத்து கார் சாரதியை கைது செய்துள்ளார்.

பத்து வயதான சுபாஸ்கரன் தமிழினி மற்றும் நான்கு வயதான சுபாஸ்கரன் சுபாஜினி ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.முன்னதாக சம்பவ இடத்தில் சுபாஜினி மரணமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழினி பின்னர் மரணித்துள்ளார்.

No comments