Header Ads

test

முள்ளிவாய்க்கால் கடலில் மோதல்!

முள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
முள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.ஆழ்கடலில் நேற்று இரவு வீசப்பட்ட பெறுமதியான மீன்பிடி வலை ஒன்று கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தின் காரணத்தினால் கரை ஒதுங்கியுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கடலில் உள்ள யோர்தான் நாட்டு கப்பலின் அடித்தளத்தில் குறித்த வலை சிக்கியுள்ளது.இந்த நிலையில் வலையை மீட்பதற்காக தெப்பப் படகில் சென்ற மீனவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.எனினும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீனவர்கள் கரை ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான பரா3 கப்பல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.குறித்த கப்பலின் மேற்பாகங்களை இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அதன் அடித்தளம் தற்பொழுது வரை அந்த இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments