Header Ads

test

மொழி பெயர்ப்பு நூல்களின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்


சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

 சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்) , சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வே நடைபெறவுள்ளது.

 யாழ்.பல்கலைகழக கலைப்பீட புதிய கட்டடத்தின் 408ஆம் இலக்க மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் கலாநிதி அதுலசிறி சமரகோன் (விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம்), கலாநிதி சுமதி சிவமோகன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்), மகேந்திரன் திருவரங்கன் (விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

 “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் – அன்றைய தினம் 400 ரூபாவிற்கு “தாரா” 450 ரூபாய் – அன்றைய தினம் 350 ரூபாவிற்கு “மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 – அன்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது

No comments