Header Ads

test

கிளிநொச்சிப்பொதுச்சந்தை: ரணில் வரவில்லை!


கிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு நேற்று ரணில் அடிக்கல் நாட்டுவதாக இருந்த போதும் அது பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சினால் 760 மில்லியன் மதிப்பீட்டில் கடடப்படவுள்ள கட்டடத்திற்கு இலங்கைப்பிரதமர் ரணில் நேற்று சனிக்கிழமை அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.ஆனால் அடிக்கல் நாட்டுநிகழ்வு அறிவிக்கப்பட்ட படி நடைபெற்றிருக்கவில்லை.

இதனிடையே கடந்த திங்கள் 16ம் திகதி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் ஆகியோரின் முன்னிலையில், அத்திபாரம் வெட்டப்பட்டு நாள் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எனினும் போட்டி அரசியல் தரப்பான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.சந்திரகுமாரின் ஆதரவாளர்களோ அடிக்ககல் நாட்டப்பட்டுள்ளதாக வாதிட்டுவருகின்றனர்.

பிரதமர் வருகை தந்து அடிக்கல் நாட்டுவதாக இருந்த திட்டத்திற்கு கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பு அரசியல் இலாபங்களுக்காக முந்திக்கொண்டு அடிக்கல் நாட்டியமை நாட்டின் பிரமதரை இழிவுபடுத்திய செயல் என பிளேட்டினை மாற்றிப்போட்டு சந்திரகுமார் தரப்பு பிரச்சாரங்கள் செய்துவருகின்றது.

2012 ஆம் ஆண்டு திறக்கப்படட முட்கொம்பன் சந்தையை பூநகரி பிரதேச சபை பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனை கொண்டு இரண்டாவது தடவையாக திறக்க ஏற்பாடு செய்தது. பின்னர் இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டதையும் அத்தரப்புக்கள் சுட்டிக்காட்டிவருகின்றன.

No comments