Header Ads

test

திருநெல்வேலியில் வீடு ஒன்றின்மீது கழிவொயில் வீச்சு


திருநெல்வேலி சிவன்புது வீதியில் உள்ள வீடொன்றில் இனம் தெரியாத நபர்களால் கழிவு ஒயில் விசப்பட்டு வீட்டு மதிலின் ஒரு பகுதி இரும்புக் கம்பியால் அடித்து  சேதப் படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (17) அதிகாலை 2 மணியளவில் யாழ், நல்லூர், இல.349/12 சிவன்புது வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீதே குறித்த கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது.

மேலும் வீட்டின் வாயிலில் உள்ள அலங்கார சிலை ஒன்றும் இரும்புக் கம்பியால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

 இவ் வீட்டின் மீது கடந்த மாதம் 20ம் திகதி அதிகாலை வேளையில் ஐன்னல் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டிந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்பாண பொலிசாரிற்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments