Header Ads

test

தனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!



காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து வடகிழங்கெங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில் அரசியல் தரப்பினை சேர்ந்த பலரும்,காணாமல் போனோர் விவகாரத்தை வைத்து வயிறு வளர்க்கும் அமைப்புக்களை சேர்ந்த பலரும் பதுங்கிக்கொண்டுள்ளனர். 

காணாமற் போனோர் அலுவலகத்தின் யாழ்.மாவட்ட அமர்வு இன்று சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடந்துவருகின்றது.இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்ட களத்தில் வெறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தவிர்ந்த வேறு எவரும் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.

அதிலும் உள்ளுராட்சி தேர்தல் வரை மனித உரிமை காவலர்களாக காட்டிக்கொண்டு பின்னர் தமிழரசுடன் ஒட்டிக்கொண்டு கதிரை பிடித்துக்கொண்டவர்கள் பலரும் முடங்கிப்போய் பதுங்கிக்கொண்டனர்.

அதே போன்று காணாமல் போனோரை வைத்து புத்தகம் வெளியிட்டுக்கொண்டு அடையாளம் விற்பவர்களும் சரி வெளிநாட்டு நிதிகளை பெற்று கணக்கு காட்ட போராட்டம் நடத்தும் சட்டத்தரணிகளும் சரி போராட்ட களப்பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.

அதேபோன்று காணாமல் பேர்னோர் தொடர்பில் குரல் கொடுத்து வந்த யாழ்.ஆயர் இல்லமும் சரி,அதனோடு தொடர்புட்ட மததுறவிகளும் சரி எட்டிக்கூட பார்த்திராத போராட்டமே யாழில் நடைபெறுகின்றது.



இதேவேளை காணாமல் பேர்னவர்களை வைத்து அரசியலில் வயிறு வளர்த்துவருவதுடன் அடுத்த தேர்தலிற்கு கடைவிரித்துவரும் வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி போன்றவர்களையும் தேடியும் காணாவில்லை. 

ஏற்கனவே முல்லைதீவு,திருகோணமலையில் தாமாக முனன்வந்து தமது எதிர்ப்பை பதிவு செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் யாழிலும் தன்னெழுச்சியாக தமது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. 

இதனிடையே எத்தனையோ குழுக்கள் அமர்வுகளை நடத்தியும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த அலுவலகத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை. அத்தோடு எம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது, நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனத்தெரிவித்து வீம்புடன் வயோதிப பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.

No comments