Header Ads

test

மன்னார்,வவுனியாவிற்கு புதிய செயலர்கள்!

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட செயலர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் இன்று மாலை வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்துக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். அதேவேளை, மன்னார் அரச அதிபராக கிருஸ்தவர் ஒருவர் நியமிக்கவேண்டும் என ஆயர் இல்லம் கேட்டிருந்து.

இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையையும் பெற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நியமனங்களை இன்று மாலை வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், வவுனியா மாவட்ட செயலாளர் ஹனீபா இருவரும் இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு வகுப்பில் உள்ள நீண்ட கால சேவையுடைய அதிகாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments