விகாரைக்குள்ளிருந்து எலும்புக்கூடு மீட்பு
இரத்தினபுரி – கஹவத்த, கல்லென விகாரையின் குகையொன்றிலுள்ள வீடொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த எலும்புக்கூட்டின் மேல் பிக்குவின் ஆடையொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment