இறுதிப் போட்டிக்குள் நுழையப்போவது யார்? பிரான்ஸ் பெல்ஜியம் அணிகளின் பலப்பரீட்டை இன்று!
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஓர் அரையிறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது. சென். பீற்றர்ஸ்பேர்க்கில் இஇடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸும் பெல்ஜியமும் பலப்பரீட்சை நடாத்துகின்றன.
தத்தமது குழுநிலைப் போட்டிகளை இலகுவாகக் கடந்திருந்த பெல்ஜியமும் பிரான்ஸும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றிலேயே பலத்த போட்டிகளைச் சந்தித்திருந்தன.
உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் ஐயமில்லை.

Post a Comment