ஆடுகின்றது அனந்தி கட்டிய கட்டடம்?
வடமாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனந்தபுரம் பகுதியில் மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடம் தற்போது இடிந்து ஆட்டங்காண தொடங்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாகாண அமைச்சர் அனந்தியின் அமைச்சின் கீழ் கட்டப்பட்ட கட்டடத்திலேயே ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதனிடையே குறித்த கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த முதலமைச்சரிடம் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை வெடிப்புக்களை நேரில் காண்பித்தார்.
கட்டிய 5, 6 மாதங்களில் இத்தனை வெடிப்புக்கள் வரவேண்டிய அவசியமில்லை. எமது அமைச்சின் செயலாளர் விரைவில் பொறியியலாளர்களைக் கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று முதலமைச்சர் இதன் போது உறுதிமொழி அளித்திருந்தார்.
Post a Comment