Header Ads

test

முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டத்தில்?

மட்டக்களப்பு -வாழைச்சேனையில் முன்னாள் போராளியான முனிதாஸ சிறிகாந் என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார்.
வாழைச்சேனை பிராதான வீதியிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாகவே அமர்ந்து இவ் போராட்டத்தினை சிறிகாந்முன்னெடுத்து வருகிறார்.
மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் நுண்கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அடிப்படை வசதி, வீடு இழப்பீடு,
தொழில்வாய்ப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தினை முன்னாள் போராளி முன்னெடுத்து வருகின்றார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவருடன் கலந்துரையாடிய போதிலும் அவர் தொடர்ந்து தமது உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments