பொலிசார் வேடிக்கை பார்க்க இளைஞன் மீது திருநெல்வேலியில் தாக்குதல்
திருநெல்வேலிப்பகுதியில் வீதியில் பயணித்த ஒருவர் மீது சமராரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் சுமார் 06.00 மணியளவில் திருநெல்வேலி இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரை டக்ரர் ரக வாகனத்தில் பயணித்த சிலரால் இடைமறிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர்களுடன் வேறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலரும் இணைந்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தடிகள் மற்றும் பொல்லுகள் கொண்டு தலையில் தாக்குதல் நடத்தியதில் குறித்த இளைஞனின் தலைப்பகுதியிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அண்மைய தொலைவில் சம்பவத்தை கவனித்ததாகக் கூறப்படும் பொலிசார் ஒருவர் சம்பவத்தைக் கண்டும் காணாதது போல கோப்பாய் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுவிட்டதாகவும் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் அப்பகுதியால் பயணித்த பொதுமக்கள் மற்றும் இரைாணுவத்தினர் காயமுற்ற இளைஞனை வேடிக்கை பார்த்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தெடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பபெற்றிருக்கவில்லை.
Post a Comment