Header Ads

test

விக்கிக்கு எதிரான சுமந்திரனின் வசைபாடல்கள் கூட்டமைப்பின் கருத்தல்ல

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களோ அல்லது வசைபாடல்களோ எவையானலும் அது அவரின் தனிப்பட்ட அல்லது அவர் சார்ந்த தமிழரசுக் கட்சியின் கருத்தாவே அமையுமே ஒழிய ஒட்டு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அமையாது.

எனத் தெரிவித்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் முதலமைச்சரை அழைத்து மாலை போட்டு வரவேற்றுக் கொண்டு வந்துவிட்டு அவருக்கு எதிரான வேலையை சுமந்திரன் போன்றவர்கள் செய்வது அநாகரிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் மீது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்த மேலும் தெரிவிக்கையில்;;..

வுடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கின்ற விக்கினேஸ்வரனை வீழ்த்த வேண்டும் அல்லது ஒதுக்க வேண்டுமென்பதற்காக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். அதற்கமையவே முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமையவே முதலமைச்சர் மீதும் தற்போது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
முதலமைச்சராக விக்கினேஸ்வரனைக் கொண்டு வருவதில் அவரது மாணவனும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான சுமந்திரன் முன்னின்று உழைத்திருந்தார். அவ்வாறு மாலை போட்டு வரவேற்றுக் கொண்டு வந்த முதலமைச்சராக்கிவிட்டு அவரை செருப்பால் அடிப்பது போன்ற அநாகரீக வேலைகளை யாரும் செய்யக் கூடாது.

குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வீழ்த்திஅல்லது ஒதுக்கிவிட்டு அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி சார்பில் ஒருவரைக் கொண்டு வருவதற்காகவெ இவ்வாறு தமிழரசுக் கட்சியினர் செயற்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே இன்றைக்கு சுமந்திரன் போன்றவர்கள் கூறுவது அவர்களுடைய கட்சியான தமிழரசுக் கட்சி அல்லது அவரது தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும். அது ஒட்டுமொத்த கூட்டமைப்பின் கருத்தல்ல.

ஏனெனில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்பட நாங்கள் முதல்வருக்கு ஆதரவாகவே செயற்படுகிறோம் என்றார்.
இதே வேளை தமிழ் மக்கள் கொயள்கையின் அடிப்படையில் ஒற்றுமையாக இருந்தார்கள். அந்த ஒற்றுமைய இன்றைக்கு சீர்குலைந்துள்ளது. ஆகவே கொள்கையின் அடிப்படையில் ஒற்றுமையாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கமைய அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் கூடு;டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகாக விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பம்.

ஆதற்க மாறான நிலைமைகள் ஏற்படுகின்ற போது அதிலும் முதலமைச்சர் தலைமையில் ஒரு கட்சி அல்லது புதிய கூட்டு உருவாகின்ற போது தொடர்ந்தும் இந்தக் கூட்டில் இருப்பதா அல்லது புதிய கூட்டில் இணைவதா என்பது என்பது குறித்தும் அந்த நேரத்தில் முடிவெடுப்போம். ஏனெனில் தற்போதைய கூட்டில் அந்தளவிற்கு எமக்கு அதிருப்தி இருக்கின்றது என்றார்.

No comments