பெட்டிக்கடையும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்:இலங்கை இராணுவம்!
முல்லைத்தீவு கேப்பாபுலவு சிறீலங்கா இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த பெண்ணொருவரை இலங்கை இராணுவம் விரட்டியடித்துள்ளது. கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையையே குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையினை மூடுமாறு முள்ளிவளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மக்களது காணிகளை ஆக்கிரமித்து கேப்பாபுலவில் சிறிலங்கா படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.
சிறிலங்கா படையினரின் முகாமிற்கு குறித்த கடை பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்தே முள்ளியவளை காவல்;துறையினர் குறித்த கடையை மூடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாம் என தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை காவல்துறை தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவருகின்றது.இந்நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறிய முதலீட்டை செய்;து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஏவலில் சிறிலங்கா காவல்துறையினர் கடைகளை மூடுமாறு நிர்ப்பந்திப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment