முதலமைச்சர் நிதியம்:மைத்திரியிடம் விக்கி கேள்வி!
முதலமைச்சர் நிதியத்தின் நியதிச்சட்டவரைவு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் 5 வருடங்களாக அது பற்றிக் கோரியும் இன்னமும் தாமதிப்பது எமது வடமாகாண பொருளாதாரவிருத்தியை அரசாங்கமானது விரும்பவில்லையோ என்று எண்ணவைக்கின்றது என வடக்கு முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்..
இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின் யாழ் வருகையை முன்னிட்டு அவசரகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் திடீர் என்று அதிகரித்துள்ளன என்றும் வன்முறையையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம்; சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கடமையில் இருக்கும் சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரையோ அல்லது இளைப்பாறிய சிரேஷ்ட உப பொலிஸ் அதிபர் ஒருவரினது தலைமையிலோ வடமாகாணசபையின் அலுவலர்களையும் உள்ளடக்கி மேற்படி வன்முறை,போதைப் பொருள் விநியோகம்,அவற்றின் பாவனை மற்றும் மண்கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்துஅவற்றைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உடனடி அறிக்கை ஒன்றைப்பெறுமாறும் கேட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது கைதி ஆனந்தசுதாகரனுக்கு மன்னிப்பு வழங்கமுடியாது இருப்பதைப்பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் அவரின் குழந்தைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு கைதியை மாற்றினால் தாய் இல்லாத குழந்தைகள் தமது தந்தையைச்சென்று கண்டு வரமுடியும் என்று முதலமைச்சரால் கூறப்பட்டதை வரவேற்று அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார். ஆதனை நினைவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கோரியுள்ளார்.
Post a Comment