செம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு –செம்மணி பகுதியில் இனங்காணப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவரது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு தொகுதியே மீட்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாரிய மனித புதைகுழிகள் இருப்பதான சந்தேகம் தீர்ந்துள்ளது.
1996 படையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் அப்பகுதியில் பாரிய பாதுகாப்பு மண் அணையொன்று அமைக்கப்பட்டிருந்தது.அதனுடன் இணைந்ததாக காவலரண்களும் அதில் இலங்கை இராணுவத்தினரும் கடமையில் இருந்திருந்தாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காலப்பகுதியில் இரவு வேளைகளில் படையினர் ஆட்களை குறித்த மண் அணைப்பக்கம் அழைத்துச்செல்வதும் பின்னர் அலறல் சத்தங்கள் கேட்பதும் வழமையான தொடர்கதையாக இருந்திருந்ததாக அயல்குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புடையினரால் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் விசாரணைக்கென கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டு மண் அணைப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாமென குறித்த குடியிருப்பாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதியின் வெளித்தன்மை பிரகாரம் சுமார் 20 வருட காலத்திற்கு முந்தியதாக இருக்கலாமென சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்;ளது.
முன்னதாக செம்மணி பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்காக மண்ணினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன.
அது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்ந்து எடுத்து சென்ற மண்ணினையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டவைத்திய அதிகாரி க.மயூரதன்; அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சான்றாதாரங்கள் காவல்துறையால் மீட்டு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
Post a Comment