Header Ads

test

கரும்புலிகள் தினம்:சிற்றரசனின் சிலை திறப்பு!


தமிழீழ தேசிய கரும்புலி நினைவேந்தல் தினமான இன்று  13ம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் அக்கராயன் பிரதேசத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறிதரன் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள் மக்கள் பங்கெடுத்த நிகழ்வில் இன்றைய தினம் வெகுவிமர்சையாக உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே தாயகமெங்கும் கரும்புலிகள் தினம் மக்களது பங்கெடுப்புடன் அமைதியான நினைவு கூரப்படுகின்றது.

முதல் கரும்புலி தாக்குதலை இலங்கைப்படைகளிற்கெதிராக நடத்திய நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி மில்லரின் திருவுருவச்சிலை அரச படைகளால் இடித்தழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments