Header Ads

test

அமைச்சராய் வாகனத்தில் கொழும்பு போனவர் முன்னாள் அமைச்சராய் ஹெலியில் யாழ் வந்தார்


அமைச்சராக வாகனத்தில் கொழும்பு சென்றி விஜயகலா மகேஸ்வரன் முன்னாள் அமைச்சராக உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் வந்து திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவகையில் அப்போது அமைச்சராக இருந்த விஜயகலா மனேஸ்வரன் உரையாற்றியதால் கொழும்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதனையடுத்து அவசரமாக பிரதமர் ரணிலின் அழைப்பில் யாழில் இருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றிருந்தார்.

ரணிலின் ஆலோசனையின்பேரில் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்வதாக நேற்று அவர் அறிவித்து இராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (07) யாழில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் அமச்சராக விசேட உலங்கு வானூர்தியில் யாழ் வந்த விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வு முடித்து அவ் உலங்கு வானூர்தியில் கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத் தொழில் அமைச்சர் தயா கமகேயும் வருகைதந்திருந்தார்.

No comments