போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சரினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மற்றும் 34/2, பாடசாலை வீதி, சின்னக்கடை, மன்னாரினை சேர்ந்த இரு பயனாளிகளுக்கு தலா 40 000.00ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடற்றொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் 30.07.2018அன்று நண்பகல் 01.00மணிக்கு அமைச்சர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் அனந்தி சசிதரனால் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment