Header Ads

test

கதிரைப்பிரச்சினை:மஹிந்த-சம்பந்தர் சந்திப்பு!

நாடாளுமன்றத்தில் தனது எதிர்கட்சி தலைவர் கதிரையினை தக்கவைக்க மஹிந்தவுடன் இரகசிய பேச்சுக்களை இரா.சம்பந்தன் தொடர்வதாக தெரியவருகின்றது.

பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற தமது குழுவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டுமெனக் கோரி, ஒன்றிணைந்த எதிரணி, கடிதமொன்றை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளது.

தங்களுடைய அணியில், 70 உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்றும், தமது தரப்புக்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவேண்டுமென்றும், அவ்வணி கோரிக்கைவிடுக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து விலகிய, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், 15 பேர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் தனது பதவியை காப்பாற்ற மஹிந்தவுடன் இரா.சம்பந்தன் இரகசிய பேரமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவை தருவதானால் தன்னை எதிர்கட்சி தலைவர் கதிரையில் தொடர அனுமதி கோரியிருப்பதாக தெரியவருகின்றது.

இதன் தொடர்;ச்சியாக தற்போரு நல்லாட்சி அரசிற்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments