துண்டு விரிக்கிறார் அனந்தி!
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி மீண்டும் கடைவிரிப்பதற்கு அனந்தி உள்ளிட்ட கும்பலொன்று இப்போதே தயாராக இருப்பதாக யாழ்ப்பாண செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவ்வகையில் முதலமைச்சர் தலைமையிலான மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக புதிய விளக்கத்துடன் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புறப்பட்டுள்ளார்.
மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர் பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் விருப்பத்துடனும் இருக்கின்றார்களென தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் அடுத்த மாகாண சபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன் மதிப்பை குறைப்பதற்காகவும், மறை முகமாக தனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு விவாதமே கைத்துப்பாக்கி விவாதமென தெரிவித்துள்ளதுடன் தற்போது கொண்டு வருகின்ற பிரச்சினையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்ற, முதலமைச்சருக்கு அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட பெண் என்ற வகையில் தன் மீது சரமாரியாக தாக்குதல்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி பட்டியலில் களமிறங்கிய அனந்தி தற்போது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனக்கு , முன்னர் செயற்பட்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியொன்றை 40 இலட்சம் கொடுத்து கொள்வனவு செய்ய அனந்தி முற்பட்டதாக உள்ளுர் செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment