இராணுவ முகாம்களை அகற்றினால் புலிகள் தலைதூக்குவார்களாம் !
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என தெரிவித்திருக்கும் அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க இராணுவ முகாம்களை அகற்றுவதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க சந்தர்ப்பம் அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (22) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எமது கட்சி ஒரு போதும் ஆணையிறவை விட்டுக்கொடுக்கவில்லை. குறிப்பாக சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலேயே ஆணையிறவு விட்டுக்கொடுக்கப்பட்டது. அவ்வாறு விடுதலைப் புலிகளிடம் எந்தவொரு பகுதியையும் இதுவரை கொடுத்ததும் இல்லை கொடுக்க போவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment