விஜயகலாவிற்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரெட்டி !
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
அத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந் நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அளிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா என்று குறிப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment