Header Ads

test

போராட்ட வெற்றி:தொண்டராசிரியர்களிற்கு நியமனம்!


வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நீண்ட போராட்;டத்தின் தொடர்;ச்சியாக அவர்களில் 457 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தொண்டர் ஆசிரியர்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த ஆசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வைத்து இந்த ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம்,சிறு கைத்தொழில் அமைச்சர் காதர் மஸ்தான், அமைச்சர் ரிசாட் பதியுதீன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் வழங்கியிருந்தனர்.

வன்னியில் முன்னர் தொண்டராசிரியர்களிற்கான நியமனத்தின் போது அப்போது அரசுடன் ஒட்டியிருந்த சந்திரகுமார் தனது ஆதரவாளர்களிற்கு தொண்டர் ஆசிரிய நியமனங்களை வழங்கியிருந்த போதும் உண்மையான தொண்டராசிரியர்கள் பாதிக்கப்பட்டிருந்தர்.

தொடர்ச்சியான அவர்களது போராட்டம் மற்றும் முதலமைச்சர்,வடமாகாணகல்வி அமைச்சரது அழுத்தங்களையடுத்து தொண்டராசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments