மீசாலையில் திருட்டைத் தடுக்க உருவானது 100 பேர் கொண்ட விழிப்புக் குழு
சாவகச்சேரி மீசாலையில் திருட்டைத் தடுக்கும் வகையில் விழிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் 100 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புக் குழுவை உருவாக்கும் மக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 300 வரையான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் இக்குழுவில் இணைந்து திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க 100 பேர் விழிப்புக்குழுவில் இணைந்துள்ளனர்.
இக்குழு மீசாலை வடக்கு மற்றும் கிழக்கில் இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு திருட்டுச் சம்பவங்களைத தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
இவ்விழிப்புக்குழு விடுதலைப்புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாகக் கட்டமை என்பது நினைவூட்டத்தக்கது.
Post a Comment