Header Ads

test

யாழில் இதுவரை 50 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 01ம் திகதி முதல் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அவா கும்பல், தனுரொக் கும்பல், விக்டர் கும்பல் என்று பல கும்பல்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதி பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் கடந்த தினங்களில் இரத்து செய்யப்பட்டு விஷேட தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

No comments