வடக்கிலுள்ள வெற்றிடங்கள் 8 விழுக்காட்டிற்கும் குறைவே?
வடமாகாணத்தில் மொத்தம் 6338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3329. மாகாண அரசினால் நிரப்பப்படவேண்டியவை 3009. இந்த வெற்றிடங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்றன. இளைப்பாறல்கள், இடமாற்றங்கள்,பதவிவிலகல்கள், இறப்புக்கள் எனப் பலகாரணங்களால் இந்த வெற்றிடங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெற்றிடங்கள் உருவாவதில்லை. நாளாந்தம் இவை மாறிக்கொண்டேயிருப்பன. ஒவ்வொரு சேவையிலும் கணிசமான அளவு வெற்றிடங்கள் ஏற்பட்ட பின்னரே சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவென முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களில் 7510 அங்கீகரிக்கப்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் ஆண்டுகளாக இவற்றை நிரப்ப முடியாதது ஏன்? ஏன கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.
பல வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் தகைமையுடையோர் முன்னிலையாகாத சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணத்திற்கு மொழி பெயர்ப்பாளர்களைக் குறிப்பிடலாம். மேசன்மார்கள், குழாய் பழுதுபார்ப்பவர்கள்,பம்புகளைஇயக்குபவர்கள்,மரவேலைசெய்வோர்,தையல்க்காரர்கள் எனப் பலரின் வெற்றிடங்கள் கவனத்திற்குவந்துள்ளன. எனினும் காலத்திற்குக் காலம் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டே உள்ளன. உதாரணத்திற்குநேற்றையதினம் நாம் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனங்கள் கையளித்தோம். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
தற்போதுஎம்மால் நிரப்பப்படவேண்டியவை 3009. ஆனால் புதிதாகநேற்றுநியமனம் கொடுக்கப்பட்டவர்களும் அந்தத் தொகையினுள் அடங்குகின்றனர்.
தவணைக்குத் தவணை நாம் கொடுத்து வந்து கொண்டிருக்கின்ற நியமனங்கள் பற்றிய முழு விபரங்களையும் கோரியுள்ளேன். அவைகிடைத்ததும்; தெரியப்படுத்துவேன்.
மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கும் பதவிகள் அனைத்தினது தொகை 40422. இவ்வளவு ஆளணியும் மத்திய அரசினாலும் மாகாண அரசினாலும் நிரப்பப்படுகின்றன. மாகாணஅரசினால் நிரப்பப்படவேண்டிய ஆளணியில் 31.07.2018 அன்றுவெற்றிடமாகநிரப்பப்படவேண்டிய ஆளணியினர் 3009. இது 7.4 விழுக்காடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment