Header Ads

test

பறிபோகும் தமிழர் நிலம்: திருட்டு மௌனத்தில் தமிழரசு!


வவுனியா வடக்கு  நெடுங்கேணி பிரதேச சபை எல்லைக்கிராமங்களில் நடைபெறும் நிலசுவீகரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருட்டு மௌனத்தை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது.

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ச.தணிகாசலமும் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த ஜெ.ஜெயரூபனும் போட்டியிட்டிருந்தனர்.இருவரும் 11 வாக்குளை பெற்ற நிலையில், திருவுளச்சீட்டின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த ச.தணிகாசலம் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தென்னிலங்கை பெரும்பான்மையின கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கூட்டமைப்பு கைப்பற்றியிருந்ததுடன் பிரதி தவிசாளர் பதவியை குடியேற்ற சிங்களவாசிக்கும் கூட்டமைப்பு தாரை வார்த்துள்ளது.

இந்நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களை பழிவாங்கும் வகையில் கூட்டமைப்பு சார்பு தவிசாளர் ச.தணிகாசலம் செயற்படுவதாக உறுப்பினரொருவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இன்றையதினம் புளியங்குளம் பொது விளையாட்டு மைதானம் வவுனியா வடக்கு பிரதேச சபையினால் ஆக்கரமிற்பிற்கு எடுத்த முயற்சிக்கு தன்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையில் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ள அவர் அத்தோடு கூட்டத்தின் இறுதியில் தனது கிராமத்தின் பிரச்சனையான வெடுக்குநாறி மலைஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு எதிராக நேற்றைய தினம் தொhல்லியல் திணைக்களத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் மேற்க்கொண்ட முறைப்பாடு , வளர்ப்பு யானைகளின் அட்டகாசம் போன்ற இரு விடயங்களையும் கதைக்க எழும்பியபோது "நீ இரு" நீ கதைக்க முடியாது என தவிசாளரால் கூறப்பட்டு கூட்டத்தை முடிப்பதாககூறி சபையில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு வாக்களித்த மக்கள் சார்பிலும் தனது வட்டாராம் சார்பிலும் அமர்த்தப்பட்ட தான் மக்களுக்கு பதில் தர முடியாத நிலமையில் வெளியேறியதாகவும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

No comments