திலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்!
நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிடி சண்டை உச்சம் பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு உறுப்பினர் பார்த்தீபனின் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட வேலியென முன்னணி உரிமை கோர மறுபுறம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நிதியென அவரது ஆதரவாளர்கள் கச்சைகட்டிக்கொண்டு களமிறங்கியிருந்தனர்.
இந்நிலையில் புளொட் சார்பு மாநகரசபை உறுப்பினர் தர்சானந் சுகாதாரக்குழுக் கூட்டத்தில்; எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாங்கள் எழுதித்தந்து அதனை பார்த்தீபன் சபையில் எழுந்து வாசிக்குமாறு பணித்ததாகவும் அதனை பார்த்தீபன் தனது கோரிக்கையாக முன்வைத்து கீழ் இறங்கி அரசியலுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் எந்த சுகாதாரக்குழுவின் எந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார குழுவின் அறிக்கையில் எந்த இடத்தில் இது இருக்கின்றது என்று கூற முடியுமா? .நீங்கள் கூறியது போல நான் வாசிப்பதற்கு நீங்கள் எழுதித் தந்த அந்த பிரதியை எனக்கும் தரமுடியுமா? ஏன்று பொதுவெளியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன்,இதனை ஒரு தீர்மானமாக எடுத்து அதனை வாசிக்குமாறு தன்னை பணித்தனை நிருபியுங்கள் நான் இந்த அரசியல் அரங்கில் இருந்து இன்றுடன் விடைபெறுகின்றேனென சவால் விடுத்திருந்தார்.
மேலும் இது பற்றி விளக்கம் கேட்கலாம் என்றால் நேற்று நடைபெற்ற சுகாதார குழு கூட்டத்திலும் கௌரவ உறுப்பினர் பங்பற்றவில்லை. பொது வெளியில் நீங்கள் இட்ட பதிவு தொடர்பாக நான் கோரிய விளக்கத்தை பொது வெளியில் அளிப்பதே சிறப்பானது என்று கருதுகின்றேன். நான் தனிநபர்கள் தொடர்பாக தப்பான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் செய்தது இல்லை. அந்தவகையில் தங்களுடைய இப்பதிவு தொடர்பாக நான் உண்மையை உரைக்கின்றேன் அதேபோல் நீங்களும் உண்மை எதுவோ அதை உரையுங்கள் என்று மட்டுமே கேட்கின்றேன் என பார்த்தீபன் சவால் விடுத்துள்ளார்.
திலீபன் தூபியை சூழ நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிக பாதுகாப்பு வேலி அண்மையில் பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment