Header Ads

test

கல்வி வளத்துடன் சமூகம் தேவை:முதலமைச்சர்!

இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம். 

இந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம் கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்றவேண்டுமென வடக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

வல்வெட்டித்துறையில் கல்வி நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஆசிரியர்களின் கைகளில் பணப்புழக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் கொந்தராத்து முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். எந்த நேரமும் கட்டடவேலை, விழாக் கொண்டாட்ட முன்னெடுப்புக்கள் என அவர்களின் நேரங்கள் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய கடமைகளில் வீணடிக்கப்படுகின்றன. 

தினம் தினம் பத்திரிகைகள் தாங்கிவருகின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது. 

இவற்றையெல்லாம் சீர் செய்யஸ்திரமான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயாரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனைவரும் இணைந்துகொண்டு முன்னெடுக்கவேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments