வீடமைப்பு சீனா:இந்தியா முறுகல் உச்சம்?
வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தினை ஏற்கனவே உறுதியளித்தது போன்று தம்மிடம் தர சீன அரசு கோரியுள்ளது. இதேவேளை தமக்கெதிராக கூட்டமைப்பு ஆட்சேபனை வெளியிட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுமுள்ளது.
வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை சீனா முன்னெடுக்கவிருந்த நிலையில், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் இந்தத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுக்காத நிலை காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையிலேயே, சீனாவினால் முன்னெடுக்கப்படவிருந்த வீடமைப்புத் திட்டத்துக்கு எதிராக வடக்கில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் பின்னணியில், அயல் நாடான இந்தியா இருந்ததா என்று சீனா தனது உயர் மட்ட இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் வீடமைப்பு திட்டத்தை நிராகரித்து இந்;தியாவிடம் அதனை கையளிக்க கூட்டமைப்பு அரசிற்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment