முல்லையில் நில ஆக்கிரமிப்பு:முகவர்களாக தமிழ் அதிகாரிகள்!
முல்லைதீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பகுதியில் மகாவலி எல் வலயத்தினில் சிங்களவர்களிற்கு காணிகள் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த முதலமைச்சர் கோரியுள்ளார்.
இதனால் ஏற்படும் இனநல்லிணக்க பாதிப்பு மற்றும் குழப்பங்களிற்கு அரசே பொறுப்பாக வேண்டிவருமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் சந்திரசிறி விதானகேயுடன் வடக்கு முதலமைச்சர் தொலைபேசி வழியே உரையாடியதாகவும் தெரியவருகின்றது.
கருநாட்டுக்கேணி பகுதியில் மகாவலி எல் வலயத்தினில் சிங்களவர்களிற்கு காணிகள் வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள்; இனநல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவதுடன் வன்முறைகளிற்கு வழிகோலுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இத்தகைய நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ் மக்களிற்கு விசுவாசமாக இருக்கவேண்டிய மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்கள் அரசினது விசுவாசிகளாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முன்னைய மஹிந்த அரசினில் நாமல் ராஜபக்ஸ முதல் றிசாத் பதியூதீன் என பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பில் அரச அதிகாரிகள் பலர் தாமும் இலாபம் பார்த்துக்கொண்டதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் கொழும்பு அரசிற்கு ஆதரவாக தற்போதும் தமிழ் அதிகாரிகள் முகவர்களாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
Post a Comment