Header Ads

test

துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி


கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) பிற்பகல் 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான பெண் 2017 ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி வர்த்தகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் சிறைவாசம் அனுபவித்து பின் விடுதலையானவர்.

இந்நிலையில் குறித்த வழக்கிற்காக இன்று நீதிமன்றத்திற்கு சென்று வரும் வேளையே, குறித்த பெண் இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments