பலாலி வானூர்தி சேவைக்கு பாதை வரைபடம் தயாராகிறது
பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கான வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால், பலாலி வானூர்தி நிலையத்துக்கு வானூர் திகள் வருகை தரும், வெளிச் செல்லும் பாதை வரைபடம் வரையும் பணி, சிவில் வானூர்திப் பணி யகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை களை மாத்திரம் முதலில் பூர்த்தி செய்து தமிழகத் துக்கான வானூர்திச் சேவையை பலாலியிலிருந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்துக்கான வானூர்திச் சேவை ஆரம்பிக்கப் பட்ட பின்னர் பிராந்திய வானூர்தி நிலையத்துக்கு ரிய கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்வது என்று யாழ்ப்பாணத்தில் நடந்த உயர்மட்டக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
பலாலி வானூர்தி நிலையத்திற்கு வானூர்திகள் வருவதற்கான பாதை, பலாலி வானூர்தி நிலையத் திலிருந்து வானூர்திகள் வெளியேறும் பாதை என் பவற்றை வரையும் பணிகளை சிவில் வானூர்திப் பணியகம் ஆரம்பித்துள்ளது.
Post a Comment