Header Ads

test

மீனவர்களிற்கு பிரச்சினை:கண்டறிந்த தமிழரசு!


முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்டத்தை விற்பனை செய்வதில் தமிழரசுக்கட்சி மும்முரமாகியுள்ளது.கொழும்பில் அரசிற்கு முண்டு கொடுத்தவாறு பிழைப்பினை பார்த்தவாறு இன்னொரு புறம் மக்களுடன் இருப்பதாக கடைவிரிக்கும் உத்தியை தமிழரசு முல்லைதீவில் தொடர்கின்றது.

முல்லைதீவு மீனவர்களிற்கு பிரச்சினை இருப்பதை தற்போதே கண்டுகொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்நிலையில் எதிர்வரும் 07 ஆம்திகதி பாராளுமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணையினை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

முhவை அங்கு கருத்து தெரிவிக்கையில்  நான் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் பேசியுள்ளேன். அவர் ஏற்கனவே இந்தவிடயம் குறித்து தெரிந்து கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்தொழில் சமாசத்துடன் பேசுவதற்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காகவும் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளாரென்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

No comments