மாவையின் பேரிலே அடாவடி!
தனது அலுவலக வாகனத்தினை துஸ்பிரயோகம் செய்துவருவதாக மாவை சேனாதிராசாவின் உதவியாளரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளருமான சோமசுந்தரம் சுகிர்தன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் தொடர்ச்சியாக வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் உப தவிசாளராக பொன்னம்பலம் இராசேந்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
முன்னரும் பிரதேச சபை தவிசாளராக சுகிர்தன் இருந்த காலப்பகுதியில் தனது அலுவலக வாகனங்களை பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றியிறக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளினில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.தற்போது ஆசிரியையான மனைவியினை ஏற்றியிறக்க அரச வாகனத்தை பயன்படுத்துவது தொடர்பிலும் வாகனத்தை வீட்டிலேயே வைத்திருப்பதுடன் சாரதியை தனிப்பட்ட கடமைகளிற்கு பயன்படுத்துவதாகவும் உள்ளுராட்சி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சரின் கவனத்திற்கு எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளன.
முன்னதாக சுன்னாகம் கழிவு ஓயில் கலந்த நிலத்தடி நீர் தொடர்பான விவகாரத்தை இழுத்து மூட 5மில்லியன் வரையில் சர்ச்சைக்குரிய நொதேர்ண் பவர் நிறுவனத்திடம் சுகிர்தன் பணம் பெற்றதனை பதிவு அம்பலப்படுத்தியிருந்தது.அப்பணத்தில் புதிய மாளிகையொன்றை அவர் கட்டியுமிருந்தார்.
அடுத்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட காத்திருக்கின்ற சுகிர்தன் தமிழரசுக்கட்சியினில் மாவையின் பின்னணியில் கட்டைப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவருகின்ற ஒருவராகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment