தொடர்கின்றது போராட்டம்:இனவாதமல்ல ஆக்கிரமிப்பே!
தெற்கு மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிரான உள்ளுர் மீனவர்களது போராட்டம் முல்லைதீவில் தொடர்கின்ற நிலையில் வடக்கு கடற்பரப்பில் அனுமதிகள் பெறப்படாமலே அத்து மீறி நுளைவதும் சட்டவிரோத தொழில் நடவடிக்கை அனைத்தினையும் தென்பகுதியினை சேர்ந்தவர்கள் செய்வது நியாயமானதாவென மீனவ அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தென்னிலங்கை மீனவர்களது வருகையினை இனவாத நோக்கில் பாக்கவேண்;டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி யாழ்.ஊடக அமையத்தில் வைத்து கருத்து தெரிவித்திருந்தார்.
பருவகால தொழிலுக்காக வடக்கில் இருந்து மீனவர்கள் தெற்கிற்கு செல்லவும் தெற்கில் இருந்து மீனவர்கள் வடக்கிற்கு செல்வதும் இந்த நாட்டில் உரிமை உள்ளது. தென்பகுதி மீனவர்களின் வடபகுதி வருகையினை இனவாதாமாக பார்க்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளமைக்கு பதிலிறுத்த மீனவ அமைப்பு பிரதிநிதிகள் கடலில் இருந்து கடல் பயணம் ஊடாக மேறகொண்டு தொழில் செய்யலாம் என்பதைவிட கரையில் தங்கி இருந்து தொழில் செய்வதாக இருந்தால் அந்த இடத்திற்கு அனுமதி பெறவேண்டும் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறவேண்டும் பிரதேச சபையில் கொட்டு லைசன்ஸ் பெறுவதற்கு பிரதேச சபை பிரதேச செயலகம் ஆகியவற்றில் அனுமதி பெறவேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வடமாகாணசபையின் முல்லைதீவு மாவட்ட பிரதிநிதி து.ரவிகரன் குறித்த கடல் பகுதியில் உள்ள கிராமத்தின் கடற்தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே ஒருவர் வந்து தொழில் செய்யமுடியுமென்பதை கூட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெறுவது இங்கு அனுமதிகள் பெறப்படாமலே அத்து மீறி நுளைவதும் சட்டவிரோத தொழில் நடவடிக்கை அனைத்தினையும் தென்பகுதியினை சேர்ந்தவர்கள்தான் வடக்கில் வந்து செய்கின்றார்கள்.இவ்வாறானவர்களின் சட்டவிரோத தொழில் நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடலில் குறித்த தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்டுத்தி ஒரு கிலோ கடல் உணவினை வெளியில் கொண்டுவருவதற்காக 18 கிலோ மீன்களை தரக்கூடிய மீன் குஞ்சுகளை அழிக்கின்றார்கள்.இவ்வாறான நிலையில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேரியும் தடைசெய்யப்பட்ட தொழிலுக்கு முற்றாக தடையினை செய்யகோரியும் போராடி வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment